TNPSC-ன் புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருதி, தேர்வு எழுதிய பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில் உள்ள இடைவெளியை நிச்சயம் குறைப்போம். தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.