2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நகைகள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகில இந்திய ஆபரண உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் கூறுகையில், நகைகளுக்கான GSTஜிஎஸ்டி தற்போது 3% ஆக உள்ளது. இதை 1% ஆக குறைக்க வலியுறுத்தி வருகிறோம். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் மற்றும் நுகர்வோர் மீதான ஜிஎஸ்டி சுமை அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு இதை குறைக்க வேண்டும் என கூறினார்.