எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்புத் திட்டத்தை செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. மேலும், மொத்த செலவினத்தை ரூ.500 கோடியிலிருந்து ரூ.778 கோடியாக உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு, பசுமை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதையும், நாட்டில் EV உற்பத்தி சூழலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் இந்த 2024 மார்ச் மாதம் கனரக தொழில்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.