தங்கம் விலை இன்று அதிரடி குறைவு

556பார்த்தது
தங்கம் விலை இன்று அதிரடி குறைவு
சென்னையில் நேற்று (மே 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.560 உயர்ந்த நிலையில் இன்று (மே 17) விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,546-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,368-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிலோ ரூ.92,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி