தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 குறைவு

17667பார்த்தது
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 குறைவு
கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்கும் நிலையில், சாமானியர்களை தங்கம் விலை உயர்வும் கடுமையாக பாதித்து வருகிறது. அந்த வகையில், சில வாரங்களாக தங்கம் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் சமீபத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையானது. இதனிடையே இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50-க்கும், 8 கிராம் ரூ.692-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி