ஜல்லிக்கட்டு காளையுடன் சென்று வாக்கு சேகரிப்பு

84பார்த்தது
ஜல்லிக்கட்டு காளையுடன் சென்று வாக்கு சேகரிப்பு
சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கைகுறிச்சி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வருகை புரிந்தார். அப்பொழுது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இவ்வருடம் முதல் பரிசு பெற்ற ஜல்லிக்கட்டு காளையான விரும்பன் காளையுடன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் வேட்பாளர் சேவியர் தாஸிற்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள்.

தொடர்புடைய செய்தி