வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், வெங்கட் பிரபு இன்று தனது ‘X’ தளத்தில் ‘நாளை சம்பவம் உறுதி’ என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நாளை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.