உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு பக்தர்கள் பூசாரிகளை போல காவி புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் , இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.