பைக்கில் பரப்புரை.. சர்ச்சையில் சிக்கிய ராதிகா

80பார்த்தது
பைக்கில் பரப்புரை.. சர்ச்சையில் சிக்கிய ராதிகா
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடியாக பைக்கில் சென்றதை, கிராம மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். இதனிடையே, நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ராதிகா மற்றும் சரத்குமார் ஹெல்மேட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி