நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி நேற்று (ஏப்ரல் 12) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திடீரென பிரசாரத்தின்போது நடனமாடி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இது குறித்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.