ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்.9ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில்
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.