கணவரின் முகமூடி அணிந்து கணவருக்காக ஓட்டுகேட்ட மனைவி

67பார்த்தது
கணவரின் முகமூடி அணிந்து கணவருக்காக ஓட்டுகேட்ட மனைவி
புதுச்சேரியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் தமிழ் வேந்தன் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக அவரது மனைவி நிவேதிதா தமிழ்வேந்தன் இன்று முதல் தனது கணவனின் முகமூடியை அணிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக புதுச்சேரியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அவருடன் சென்ற பெண்கள், ஆண்கள் என அனைவரும் வேட்பாளர் தமிழ்வேந்தனின் முகமூடி அணிந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி