அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் ஆங்கில பயிற்சி

73பார்த்தது
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் ஆங்கில பயிற்சி
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் உள்ள தென்னிந்திய மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலம் ஆங்கிலம் கற்பித்தல் குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாம் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி