'ஸ்பைடர் மேன்' படங்களின் 4-வது பாகம் உருவாகி வருகிறது. இதிலும், டாம் ஹாலண்டே ஸ்பைடர் மேனாக நடிக்கிறார். மேலும், ஸ்பைடர் மேன் நோ வே ஹோமில் கேமியோ ரோலில் நடித்திருந்த ஆண்ட்ரூ கார்பீல்ட், இதிலும் நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. அதற்கு ஆண்ட்ரூ கார்பீல்ட் தற்போது பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் என்ன சொன்னாலும் இப்போது யாரும் நம்பப்போவதில்லை. நான் அனைவரையும் ஏமாற்றப்போகிறேன்' என கூறியுள்ளார்.