கோவை வேளாண் பல்கலை. தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம், தாவர உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் , பயிர் தாவரங்களில் மரபணு திருத்தம் குறித்த, 5 நாள் செயல்முறை பயிற்சி துவங்கியது. உயிர் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, பேராசிரியர் அருள், நாடு முழுதும் இருந்து பல்வேறு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.