இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 11 தமிழர்கள் இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அப்துல் கலாம், சிவன், மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன், தஞ்சாவூரைச் சேர்ந்த சங்கரன், சென்னையை சேர்ந்த வனிதா, விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி, நெல்லை மகேந்திரகிரி இயக்குனர் ஆசீர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி ஆகியோர் இஸ்ரோவை கலக்கிய தமிழர்கள்.