இந்தோனேசியாவில் பெற்றோர் கண்முன்னே ஏரிக்குள் சிறுமியை முதலை இழுத்து சென்ற பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிறு (ஜன. 12) அங்குள்ள கிராமத்தின் ஏரியில் Caca என்ற 5 வயது சிறுமியை முதலை வாயில் கவ்வி இழுத்து சென்றது. பின்னர் சிறுமியின் சடலம் நீரில் மிதந்து வந்த நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். அவரது மண்டை ஓடு முதலையின் வாயில் நசுக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.