விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

359பார்த்தது
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
‘மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் டிச.14ஆம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள், உரிய ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. 14ஆம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.