மகளிர் இலவச பேருந்து பயணம்: மோடி சர்ச்சை கருத்து!

69பார்த்தது
மகளிர் இலவச பேருந்து பயணம்: மோடி சர்ச்சை கருத்து!
சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து பிரதமர் மோடியின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழல்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பேசியுள்ளார். ஆனால், சென்னையில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையே ஆய்வுகள் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி