பிரஷர் பார்க்கும் போது 140/90 என இரண்டு மதிப்புகள் எழுதுவது ஏன்?

71பார்த்தது
பிரஷர் பார்க்கும் போது 140/90 என இரண்டு மதிப்புகள் எழுதுவது ஏன்?
ரத்த அழுத்தத்தை அளவிடும் போது, 140/90 mmHg என இரண்டு மதிப்புகள் எழுதுவதை பார்த்திருப்போம். இதனுடைய அர்த்தம் தெரியுமா? மேலே இருக்கும் மதிப்பு சிஸ்டோலிக் அழுத்தம் ஆகும். இது இதயம் சுறுசுறுப்பாக ரத்தத்தை பம்ப் செய்யும் போது தமனிகளிலுள்ள அதிகபட்ச அழுத்தத்தை குறிக்கிறது. கீழே இருக்கும் மதிப்பு டயஸ்டோலிக் ஆகும். இது துடிப்புகளுக்கிடையே இதயம் ஓய்வெடுக்கும் போது உள்ள குறைந்தபட்ச அழுத்தத்தை குறைக்கிறது. தனி நபருக்கு 120/80 என்ற ரத்த அழுத்த நிலை நார்மல் ஆகும்.