சென்னை காவல்துறை ஆணையர் பெயரில் மோசடி முயற்சி

58பார்த்தது
சென்னை காவல்துறை ஆணையர் பெயரில் மோசடி முயற்சி
சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சி நடந்துள்ளது. +92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் DP-ல் சென்னை காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் எக்ஸ் தளத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி