சென்னையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் விரைவு மீட்புக் குழு (Rapid Response Team) அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையான உதவிகளை பெற அதிமுக தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தை சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ குழு அமைத்து, அதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நிற்கிறது என கூறியுள்ளார்.