ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ததால் விமான நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில், விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரை எப்படி கடந்து செல்வது என தெரியாமல் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்து லக்கேஜ் வண்டியை எடுத்து அந்த தள்ளுவண்டியில் நிற்க அவரை ஊழியர் தள்ளிவிட்டு விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.