மும்பை தண்டவாளத்தில் நீந்திச் சென்ற மீன்கள் (வீடியோ)

70பார்த்தது
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அந்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியிருக்கும் நீரில் மீன்கள் நீந்திச் செல்கின்றன. இதை வீடியோவாக எடுத்த சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதை பகிர்ந்த நெட்டிசன்கள், “இனி மீன் பிடிக்க ஏரி, குளங்களுக்கு செல்ல தேவையில்லை, ரயில் நிலையத்திற்கு வந்தால் போதுமானது” என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி