தமிழகத்தில் வெயில் உக்கிரத்த்தால் 2 இடங்களில் தீ விபத்து

57பார்த்தது
தமிழகத்தில் வெயில் உக்கிரத்த்தால் 2 இடங்களில் தீ விபத்து
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக நேற்று (மே 29) தீ விபத்துகள் ஏற்பட்டது. கிண்டி அருகே ஒர்க்‌ஷாப் மதில்சுவரை ஒட்டி குப்பைக் கழிவுகள் தேங்கின. இதன் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் வெயில் தாக்கத்தால் வெடித்தது. அதிலிருந்து வெளியான தீப்பொறிகள் குப்பைக் கழிவுகளில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. மீனம்பாக்கத்தில் வெயிலின் உக்கிரத்தினால் முட்புதர் காடுகள் தீப்பிடித்தன. 2 சம்பவங்களிலும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி