தேசிய தலைநகர் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பில், பட்டாசு விற்பனை, சேமிப்பு, பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986இன் பிரிவு 5 இன் கீழ், அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிக்க நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.