கேரளா: கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று (டிச.29) நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ உமா தாமஸ், எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து தவறி விழுந்தார். சுமார் 18 அடி உயரத்தில் இருந்து அவர் விழுந்ததில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த உமா தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.