ஐந்தாம் கட்ட தேர்தலில் பெண் வாக்காளர்கள் முன்னிலை

54பார்த்தது
ஐந்தாம் கட்ட தேர்தலில் பெண் வாக்காளர்கள் முன்னிலை
2024 மக்களவை பொதுத் தேர்தலின் ஒரு பகுதியாக, கடந்த 20ஆம் தேதி நடந்த ஐந்தாவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த பெண் வாக்காளர்களில் 63% பேர் வாக்களித்திருந்தனர். ஆண்களில் இது 61.48% மட்டுமே. ஐந்தாம் கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (மே 25) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி