மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுவிட்டு சென்னைக்கு ரயிலில் திரும்பியபோது சிக்கன் ரைஸ், பர்கர் சாப்பிட்ட தமிழ்நாட்டு வீராங்கனை எலினா லேட்டர்(15) உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.