பிப். 6க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்!

55பார்த்தது
பிப். 6க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்!
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர்களை பிப்.6ம் தேதிக்குள் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10, படகில் செல்ல கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி