10 வயது முதல் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெற்ற மகளை 10 வயது முதல் 14 வயது வரை பலமுறை பலாத்காரம் செய்த வாகமண் பகுதியைச் சேர்ந்த 66 வயது தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறையும், ரூ.1,80,000 அபராதமும் விதித்து இடுக்கி பைனாவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி ஆசிரமத்தில் படித்து வந்த நிலையில், விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இக்கொடூரம் நடந்துள்ளது.