ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 10 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ. 1,020க்கு விற்பனை செய்யப்பட்டது.