பெருந்துறை - Perundurai

விஜயமங்கலம் பாரதி பள்ளி தொடர்ந்து மாநில அளவில் சாதனை.

விஜயமங்கலம் பாரதி பள்ளி தொடர்ந்து மாநில அளவில் சாதனை.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய 415 மாணவர்களும்   100 சதவீதம் முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை புரிந்து வருகின்றனர்.  மாணவி தனிஷ்கா 500க்கு  497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடத்தையும் பள்ளியின் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மாணவி தனுஷியா 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் பூபதி 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவி கீர்த்தனா, மாணவர்கள் ராகவேந்திரர், சஞ்சய் ஆகிய மூன்று பேரும் 494 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மாணவி தனீஷா மற்றும் மாணவர் கௌதம் 493 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும், மாணவிகள் அஸ்மிதா, தர்ஷினி மற்றும் மாணவர் இளங்கோ ஆகிய மூன்று பேரும் 492 மதிப்பெண்கள் பெற்று 6ம் இடத்தையும், மாணவி மகதி மாணவர் மிதுன் மற்றும் ஒரு மிதுன் என மூன்று மாணவர்கள் 491 மதிப்பெண்கள் பெற்று ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.   490க்கு மேல் 16 மாணவர்களும் 480 க்கு மேல் 75 மாணவர்களும் 450 க்கு மேல் 196 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்று சாதனை படைத்த  மாணவ, மாணவிகள் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும்,   பள்ளியின் தாளாளர் மோகனாம்பாள், முதல்வர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வீடியோஸ்