அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் டேனிரோ டார்கேரியன் கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் காதல் வயப்பட்டுள்ளார். சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் வரை சென்றுள்ளது. இதையடுத்து, டேனி சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் சிறுவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளான்.