பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய் ஏலம் போனது.
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் 1, 680 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். இது கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 26. 27-க்கும், அதிக பட்ச விலையாக ரூ. 26. 62-க்கும், என மொத்தம் ரூ. 20 ஆயிரத்து 206-க்கு ஏலம் போனது. இந்தத் தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.