சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, நஞ்சுண்டாபுரம், பாலதொழுவு, ஓலப்பாளையம் உள்ளிட்ட 17 குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இதே ஊராட்சிக்கு அருகில் உள்ள புதுப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொது மக்களுக்கும் புதுப்பாளையம் ஊராட்சி ஓடை அருகே பொது கிணறு வெட்டி அந்த அந்த கிணற்றில் இருந்து தனித்தனி மின் மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதில் பாலதொழுவு ஊராட்சிக்காக பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் கிணற்றுக்குள் மேல் மட்டமாக பொருத்தப்பட்டு அதன் குழாய்கள் தண்ணீரில் படாமல் இருந்ததால் போதுமான அளவு பாலதொழுவு ஊராட்சிக்கு குடிநீர் எடுத்து விநியோகம் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாலதொழுவு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 நாட்களாக குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாலதொழுவு ஊராட்சியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஆலமரம் என்ற இடத்தில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.