வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்சல் புயலாக மாறிய நிலையில் இன்று கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் கனமழை மற்றும் அதிவேகமாக காற்று வீசப்படுகிறது. இந்நிலையில், குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், பயணிகள் அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, விமானம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.