பெருந்துறையை அடுத்துள்ள சிறுவலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையை அடுத்துள்ள சிறுவலூர் போலீசார் தங்களது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நேற்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பழக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கடை யின் உரிமையாளரான வரப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலை (52) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1, 800 மதிப்பிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.