விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு.

1110பார்த்தது
விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு.
பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகே புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் சமூகநீதி மாநில மாநாடு கடந்த 18-ந் தேதி மாலை நடந்தது. இதில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் விஜயமங்கலத்துக்கு வந்திருந்தனர். அப்போது, டோல்கேட் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில், மாநாட்டுக்கு வந்திருந்த சிலர் தங்களது இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் டிராக்டர்களை இயக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் மாநாட்டு பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸ் அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் 2 கார்களின் டிரைவர்கள், 3 டிராக்டர்களின் டிரைவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் இயக்கியுள்ளனர். மேலும் அதிக சத்தத்துடன் ஹாரன்களை ஒலிக்க செய்துள்ளனர். தாறுமாறாக வாகனங்கள் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனை போலீசார் வீடியோ எடுத்தனர். அதை வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் டிராக்டர்களின் டிரைவர்கள் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி