குன்னத்தூர் பிரச்சனை: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.

1537பார்த்தது
குன்னத்தூர் பிரச்சனை: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.
குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் ஊராட்சியில்  277 -வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கினார்.

 திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காவுத்தம்பாளையம் ஊராட்சி குமரிக்கல்பாளையத்தில் பொதுமக்கள் கடந்த 277 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்படி பகுதியில் 2300 ஆண்டு பழமை வாய்ந்த 32 அடி உயர நடுகல் உள்ளது. தமிழ்நாட்டில் தொல்லியல் துறைக்கு சொந்தமான 32 இடங்களில் குமரிக்கல்பாளையம் ஒன்றாகும். தற்போது இங்கு அமைய உள்ள உயர்மின் கோபுர துணை மின் நிலையத்தால் தொல்லியல் துறைக்கு சார்ந்த புராதான சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கடந்த 277 ஆவது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அவசர அவசியம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என


  அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி