ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு ராமேஸ்வரம், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று(செப்.9) காலை முதலே மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் போட்டி போட்டு மீன்களை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர்.
நேற்று மார்க்கெட்டுக்கு 30 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. கேரளா, ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் வழக்கத்தைவிட அதிகமாக கொண்டு இருந்தது. வரத்து அதிகரித்தாலும் ஒரு சில மீன்கள் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இதேபோல் ஒரு சில மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட குறைந்து உள்ளது.
நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு: -
வஞ்சரம் - 1, 100, கடல் அவுரி - 750, கடவா - 450, சங்கரா - 450, வெள்ளை வாவல் - 900, கருப்பு வாவல் - 750, கடல்பாறை - 550, முரல் மீன் - 400, விலாங்கு - 600, டுயானா - 750, மயில் மீன் -750, ப்ளூ நண்டு - 700, இறால் - 700, மத்தி - 350, அயிலை - 300, தேங்காய் பாறை - 550, திருக்கை - 600, கொடுவா - 650, கிளி மீன் - 350.