ஈரோடு: ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிபட்டன

66பார்த்தது
ஈரோடு: ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிபட்டன
ஈரோடு ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இங்கு காலை மாலை இரவு என எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக வட மாநிலத்தவர்கள் குடும்ப குடும்பமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு ரெயில் நிலைய வளாகம், டிக்கெட் கொடுக்கும் இடம், நடைமேடைப் பகுதிகளில் நாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே ரெயில் நிலைய பகுதிகளில் நாய்கள் கூட்ட கூட்டமாக சுற்றி வருகின்றன. சில சமயம் நாய்கள் பயணிகளை கூரைப்பதும், துரத்துவது சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் ஈரோடு ரெயில் நிலையத்தை அச்சத்துடனேயே கடந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ரெயில் நிலைய அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்று நாய் பிடிக்கும் வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில்வே நுழைவுப் பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், நடைமேடை பகுதிகளில் சுற்றி திரிந்த நாய்களை மடக்கி பிடித்தனர்.

அந்த நாய்கள் பிடிக்கப்பட்டு சோலார் பகுதியில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்ப கட்டுப்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் அந்த நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசிகளும் போடப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி