ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது (வ 46). இவருடைய மனைவி வனிதா. இரு வரும் வாரச்சந்தையில் ஆடு வியாபாரம் செய்து வந்தனர் 22-ந் தேதி கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தையில் விற்பதற்காக 8. ஆடுகளை ஒருவேனில் ஏற்றி சென்றனர்.
சந்தைக்கு சென்ற பின்னர் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இது குறித்து கோபி போலீசில் சிதம்பரம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது , சிறுவலூர் வாரச்சந்தைக்கு 2 பேர் சந்தேகப்படும் வகையில் ஆடு விற்க வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார். இருவரிடமும் அங்குசென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோபியை சேர்ந்த மணிகண்டன் (36), கரட்டடிபாளையத்தை சேர்ந்த விஜயன் (40) என்பதும், இருவரும் சிதம்பரத்தின் ஆட்டை திருடி விற்க வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கோபி போலீ சார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், விஜயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.