கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது, நடனம் கலைநிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனம், பொங்கல் வைத்தல் என மாணவ மாணவிகள் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
வருகிற 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது, பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் பள்ளி கல்லூரிகளில் முன்பாகவே பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் கரும்பு, மஞ்சள் வைத்து மண் பானையில் பொங்கல்கள் வைத்து கொண்டாடினர். அதன்பின்னர் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இக்கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் தமிழர் திருநாளான பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.