கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் கோசணம் ஊராட்சி, கே.மேட்டுபாளையம் மூணாம்பள்ளி இந்திராநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள திமுக மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.