சக்தி விநாயகர் கோவிலில் அரச, வேப்ப மரத்துக்கு திருமணம்

1070பார்த்தது
சக்தி விநாயகர் கோவிலில் அரச, வேப்ப மரத்துக்கு திருமணம்
ஈரோடு, கைக்காட்டி வலசு வித்யாநகரில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு உலக நலன், திருமணம் ஆகாதவர்க ளுக்கு திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கவும் வேண்டி அரச மரம், வேம்பு மரங்களுக்கு திருமண பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும், அரச-வேம்பு நாயகி அம்மன் திருமண பூஜையும் நடந்தது. சக்தி விநாயகர் கோவில் அர்ச்சகர் பாலாஜி பூஜைகளை நடத்தி வைத்தார். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி