நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கனமழை பெய்தது. அப்போது வேமாண் டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்துவிட்டது. பள்ளி மைதானத்தின் நடுவில் கிடக்கும் இந்த மரம், மாணவர்கள் விளையாட இடை யூறாக உள்ளது. மேலும் நீண்ட நாட்கள் ஆனதால் இந்த மரத்தில் விஷ ஜந்துகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன்காரணமாக மாணவர்கள் இந்த மரத்தில் ஏறி விளை யாடும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு மனு கொடுத்தும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற் படும் முன் இந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.