கோபியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா நேற்று (ஜனவரி 17) கொண்டாடப்பட்டது,
இதனை ஒட்டி தமிழகத்தில் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது அதிமுகவின் நிறுவனத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கோபி கச்சேரி வீதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு கோபி முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து கட்சி பொறுப்பாளர்கள் கீழே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செங்கோட்டையன் நகர் பகுதியில் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற உள்ளது,
இந்த கபடி போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கோப்பைகளை வழங்குவதற்காக நிர்வாகிகளிடம் கோப்பைகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார். முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.