பவானிசாகர்: புகையான் நோயால் நெல் மகசூல் பாதிப்பு; விவசாயிகள் வேதனை

53பார்த்தது
பவானிசாகர்: புகையான் நோயால் நெல் மகசூல் பாதிப்பு; விவசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு பாசனங்களுக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூலை 12-ந் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை 120 நாட்களுக்கு முதல் போக நெல் சாகுபடிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களாக இரு பாசனங்களிலும் நெல் அறுவடை நடக்கிறது. தொடர் மழையால் பல இடங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகையான் நோய் தாக்குதலால், ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் பாதிப்பு உள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: -தொடர் மழையால் நெற்பயிர்களில் ஏற்பட்ட புகையான் நோய் தாக்குதலால் நெல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 

நெல் நடவு முதல் அறுவடை வரை வயல்கள் பக்கம் வேளாண்மை துறையினர் வருவதில்லை. இதனால் நோய் தாக்குதல் தெரியாமலும், அதற்கு தீர்வு காணாத நிலையில் தொடர்கிறது. தற்போது மழையால் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி