ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பஸ் நிறுத்தத்தில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் தன்னுடைய கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.
பின்னர் போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது 10 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 35) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.